Tuesday, September 09, 2008

முட்டை பொடிமாஸ்
---------------

தேவையான பொருட்கள்
முட்டை - 2
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவுஉளுந்து - 1/4
தேக்கரண்டிசீரகம் - 1/4
தேக்கரண்டிஎண்ணெய் - 2
தேக்கரண்டிஉப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூளைப் போட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றிக் கரண்டியால் நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பின் மீது அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், உளுந்து, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் அதில் போட்டுப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றிக் கரண்டி போட்டு கிளறவும். முட்டை வெந்ததும் சிவப்பதற்கு முன் இறக்கவும்.