Saturday, October 14, 2006

பற்றீஸ்




தேவையான பொருள்கள்.

கோதுமை மா..250கிராம்
அவித்த கோதுமைமா..150 கிராம்
உப்பு தேவையான அளவு
மஞ்சல் தூள் ஒரு சிட்டிகை

உருழைக்கிழங்கு 500 கிராம்
வெங்காயம் 2 பெரியது
பச்சை மிளகாய் 4
தனி மிளகாய் தூள் 1 மேசைக்கறண்டி
கறிவேப்பிலை தேவையான அளவு
கடுகு பெருஞ்சீரகம் தாளிப்பதற்கு தேவையான அளவு
பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்

செய் முறை.

இருவகை மாவுடன் மஞ்சல் உப்பு ஒரு மேசைக்கறண்டி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

அடுத்தபடியாக.

உருழைக்கிழங்கை அவித்து தோள் அகற்றி அதை நல்ல சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம் பச்சமிளகாயை சிறிய துண்டாக வெட்டிக்கொள்வும்

அகண்ற பாத்திரத்தில் தாளிப்பதற்கு சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்தவுடன் சீரகம் வெட்டிய வெங்காயம் மிளகாயைப் போட்டுபொன்னிறமாக வதங்கியதும் கறிவெப்பிலை போட்டு அதனுடன் மளகாய் துளைசேர்த்து கிளறி உடனே வெட்டிய கிழங்கு உப்பு சேர்த்து அடுப்பின் வெக்கையை நன்கு குறைத்து கிளறி இறக்கவும்.

பின்பு.

பிசைந்த மாவை சிறிய உறுண்டையாக்கி அதை கொலுக்கட்டை வடிவில் எடுத்து அதனுள் உருழைக்கிழங்கை வைத்து (செய்த கறி) நன்கு மூடவேண்டும் அகண்ற பாத்திரத்தில் எண்ணெய் கொதித்ததும் செய்த எடுத்த பற்றீசை பொன் நிறத்தில் பொரித்தெடுக்கவும்.

இதிள் உள்ள படம் நான் செய்து எடுத்த படம்



சமையல் கலையில்

ராகினி

Thursday, September 28, 2006




சிக்கன் கறி.




தேவையான பொருட்கள்.

*1 கிலோ கோழி இறைச்சி

*3 பெரிய வெங்காயம்

*5 பல் பூண்டு

*2தக்காளிப்பழம்

*1 மேசைக்கரண்டி மிளகாத்தூள்

*1 தேக்கரண்டி மசலாத்தூள்

*3 தேக்கரண்டி தயிர்

*இஞ்சி சிறியதுண்டு

*தேவையான அளவு எண்ணெய்

*தேவையான அளவு உப்பு.

செய்முறை.

கோழியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பூண்டு இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தையும் வெட்டிக் கொள்ளவும்.

தயிரைக் நன்றாக கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து பொன்நிறமாக வதக்கவும். பின்பு அதனுடன், அரைத்த இஞ்சி பூண்டையும் சேர்த்து வதைக்கிக் கொள்ளவும். பின் கோழி இறைச்சி, தயிர், மிளகாய்த் தூள், உப்பு மசலாத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து, தயிர்வற்றும் வரை அவியவிட்டு இறக்கவும்.

வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும்.



Thursday, September 21, 2006

தக்காளி சட்னி

நல்ல..தக்காளி 4 மிளகாய்
வற்றல் 5
கறிவேப்பிலை சிறிது
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
பூண்டு 4 பல்
----
மிளகாய் வற்றலை முதலில் மிக்சியில் அரைத்து கொண்டு பிறகு தக்காளியையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு, கடுகு வெடித்தவுடன் பூண்டை நன்கு மசித்து போடவும்.
அரைத்த தக்காளியை அதில் ஊற்றி, கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். இட்லி, தோசை மற்றும் பொங்கலுடன் சாப்பிடலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
நல்ல புளி உள்ள தக்காளி கிடைக்கவில்லை என்றால் சிறிது புளி சேர்த்து கொள்ளவும்.
வாழைப்பழ பக்கோடா

வாழைப்பழம் 2
கடலை மாவு 4 மேசைக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய்

கடலை மாவுடன் பெருங்காயம் மஞ்சள்தூள் .மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தைத் தோலுரித்து அரை அங்குல கனத்திற்கு வட்டமான துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றிக் கொதிக்கவிடவும். கரைத்த மாவில் வாழைப்பழத் துண்டுகளை தோய்த்து எடுத்து வாணலியில் கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.