Saturday, October 14, 2006

பற்றீஸ்




தேவையான பொருள்கள்.

கோதுமை மா..250கிராம்
அவித்த கோதுமைமா..150 கிராம்
உப்பு தேவையான அளவு
மஞ்சல் தூள் ஒரு சிட்டிகை

உருழைக்கிழங்கு 500 கிராம்
வெங்காயம் 2 பெரியது
பச்சை மிளகாய் 4
தனி மிளகாய் தூள் 1 மேசைக்கறண்டி
கறிவேப்பிலை தேவையான அளவு
கடுகு பெருஞ்சீரகம் தாளிப்பதற்கு தேவையான அளவு
பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்

செய் முறை.

இருவகை மாவுடன் மஞ்சல் உப்பு ஒரு மேசைக்கறண்டி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

அடுத்தபடியாக.

உருழைக்கிழங்கை அவித்து தோள் அகற்றி அதை நல்ல சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம் பச்சமிளகாயை சிறிய துண்டாக வெட்டிக்கொள்வும்

அகண்ற பாத்திரத்தில் தாளிப்பதற்கு சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்தவுடன் சீரகம் வெட்டிய வெங்காயம் மிளகாயைப் போட்டுபொன்னிறமாக வதங்கியதும் கறிவெப்பிலை போட்டு அதனுடன் மளகாய் துளைசேர்த்து கிளறி உடனே வெட்டிய கிழங்கு உப்பு சேர்த்து அடுப்பின் வெக்கையை நன்கு குறைத்து கிளறி இறக்கவும்.

பின்பு.

பிசைந்த மாவை சிறிய உறுண்டையாக்கி அதை கொலுக்கட்டை வடிவில் எடுத்து அதனுள் உருழைக்கிழங்கை வைத்து (செய்த கறி) நன்கு மூடவேண்டும் அகண்ற பாத்திரத்தில் எண்ணெய் கொதித்ததும் செய்த எடுத்த பற்றீசை பொன் நிறத்தில் பொரித்தெடுக்கவும்.

இதிள் உள்ள படம் நான் செய்து எடுத்த படம்



சமையல் கலையில்

ராகினி

4 comments:

றெனிநிமல் said...

அடடா!

அந்த மருதாணி வர்ணம் கொண்டதும் அதுலே தங்க காப்புகளும் தெரிவது உங்கள் கைகளா?

எப்போது சிகை அழங்காரம் என்று ஓர் பகுதி ஆரம்பிப்பீர்கள்.
அட! அப்ப தானே உங்கள் முகத்தையும் பார்க்க முடியும்.

rahini said...

nanri reni

senthamizh said...

உங்கள் குறிப்புகளை விட நீங்கள் கொடுத்திருக்கும் நிழற்படங்கள் அழகு!
வாழ்த்துகள்..
இராசேந்திர உடையார்.

rahini said...

nanri ungkal varavukku